குமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு இழைபாலம் பராமரிப்பு பணிகள். குறிப்பாக பாலத்தின் கட்டுமானம் காலத்தில் விவேகானந்தர் நினைவு மண்டபம் பகுதியில் உள்ள இரும்பு தூண் போல் திருவள்ளுவர் சிலை பாறை பகுதியிலும் பக்கத்துக்கு இரண்டு உயர்ந்த இரும்பு தூண்கள் பாலம் பணிக்காக அமைக்கப்பட்டிருந்தது.


கண்ணாடிப் பாலத்தை கடந்த (டிசம்பர்_30)ம் நாள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த போது, திருவள்ளுவர் சிலை பகுதியின் பாலத்தின் இரண்டு பக்க வாக்க இரண்டு தூண்கள் அகற்றப்பட்டது.


விவேக் பாறை பகுதியில் இருந்த உயர்ந்த இரண்டு தூண்களை முழுமையாக அகற்றும் பணி இன்று தொடங்கியது, அத்துடன் பாலத்தின் மேல் கூண்டு வடிவம் பகுதியில் விளக்குகள் அமைக்கும் பணியும் நடந்து வருவதால். இன்றிலிருந்து வரும் 3 நாட்கள் பராமரிப்பு பணியின் காரணமாக பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு பாறை மட்டுமே செல்ல முடியும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பணிகள் மறு உத்தரவு வரும் வரை செல்ல முடியாது என பூம்புகார் கப்பல் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.





