கோவை குனியமுத்த்தூர், நரசிம்மபுரம், ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்ட்டின், இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, விடுமுறைநாள் என்பதால், தனது குடும்பத்துடன் கிருஸ்துமஸ் கொண்டாட உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலையில் வீடு திரும்பிய நிலையில் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 103 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 10 ஆயிரம் களவு போனது தெரியவந்துள்ளது. இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், தடய அறிவியல் நிபுணர்கள், மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். வீட்டின் பூட்டை உடைக்காமல் கதவை திறந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. தெரியவந்துள்ளது.
எனவே நன்றாக பழக்கம் உள்ள நபர்கள் யாராவது இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்று போலிசார் சந்தேகிக்கின்றனர். மேலும் போலிசார் சம்பவ இடத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




