• Wed. Dec 11th, 2024

திரைப்படமாகிறது அப்துல் கலாம் வாழ்க்கை!

Byகாயத்ரி

Mar 24, 2022

மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாமின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம். அக்னி ஏவுகணை உள்ளிட்டவற்றில் பெரும்பங்கு வகித்த அப்துல்கலாமின் நினைவை போற்றும் வகையில் அவர் பிறந்த ராமேஸ்வரத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

அப்துல் கலாமின் அக்னி ஏவுகணை சோதனை குறித்து முன்னதாக ராக்கெட் பாய்ஸ் என்ற வெப் சிரிஸில் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது. இந்த படத்தை மலையாள இயக்குனர் ஸ்ரீகுமார் இயக்க உள்ளார். இந்த படத்தில் அப்துல்கலாமாக நடிக்க முன்னணி மலையாள இளம் நடிகர்கள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.