வழிபாடு செய்வது தமிழர்களின் மரபாக உள்ளது.காவிரி நதி பாயும் அனைத்து ஊர்களிலும் ஆடிப்பெருக்கு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. காவிரி அன்னையை வரவேற்று விவசாயம் செழிக்கவும் வாழ்வு வளம் பெற்று நலமுடன் வாழ பொதுமக்களால் ஆடிப்பெருக்கு விழா வருடம் தோறும் ஆடி மாதம் 18ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பிரசித்தி பெற்ற பூம்புகார் காவேரி சங்கமத்தில் ஆடிப்பெருக்கு விழாவை காலை முதல் ஏராளமான பொதுமக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

காதோளை கருகமணி, விளாம்பழம், பேரிக்காய் உள்ளிட்ட பழ வகைகள் பச்சரிசி, மாவிளக்கேற்றி காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து காவிரித் தாய்க்கு படையலிட்டு வழிபட்டனர்.குடும்பத்தில் பெரியோர்கள் அனைவருக்கும் மஞ்சள் கயிற்றை அணிவித்து ஆசி வழங்கினர். புதிதாக திருமணமான புதுமணத் தம்பதியினர் தங்கள் திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு புதிய மங்கள நாண் பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியும் விமர்சையாக நடைபெற்றது.காவிரி ஆற்றின் கரைகளில் ஏராளமான பெண்கள் ஆடிப்பெருக்கு விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
