• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு வழக்கு: இன்று ஐகோர்ட் தீர்ப்பு

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக்கூடாது என்று உத்தரவிடக் கோரிய வழக்கில் ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலம் ஏராளமானோர் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 2811 மின் வாரிய அலுவலகங்களில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக்கூடாது என்று உத்தரவிடக் கோரிய வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது.