• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆடையில் நூதன முறையில் கருப்பு பணம் கடத்திய இளைஞர்

BySeenu

Apr 23, 2024

கோவையில் இருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் இளைஞர் ஒருவர் ஆடையில் நூதன முறையில் கருப்பு பணம் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா தமிழக எல்லையான வாளையார் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பேருந்துகளில் பயணிகளிடம் கேரள போலீசார் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது கோவையிலிருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த எர்ணாகுளம் அருகே ஜெராகி பகுதியைச் சேர்ந்த வினோ என்பவரை பரிசோதித்த போது அவரது ஆடையில் ரகசிய அறைகள் தயார் செய்யப்பட்டு அவற்றிற்குள் பணம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இன்றி கொண்டு சென்றதால் கருப்பு பணம் கடத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர் மறைத்து வைத்திருந்த 14 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.