கோவை மேற்கு தொடர்ச்சி ஒட்டிய கிராமங்களில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தும், விளை நிலங்களுக்குள் புகுந்தும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மனிதர்களை தாக்கிக் கொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த ரோலக்ஸ் என்ற ஒற்றைக் காட்டு யானையை வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து பொள்ளாச்சி டாப்சிலிப்பில் உள்ள முகாமிற்கு கொண்டு சென்றனர்.
இதனை அடுத்து சிறுவாணி அடிவாரம் ஆலாந்துறை பகுதியில் ஒற்றைக் கொம்பன் நடமாட்டம் தற்பொழுது காணப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தடாகம் சுற்று வட்டார பகுதியில் மீண்டும் வேட்டையன் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.
மேலும் மருதமலை அடிவாரப் பகுதியில் குட்டிகளுடன் ஆறு காட்டு யானைகள் உலா வந்து கொண்டு உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தடாகம், பன்னிமடை, பொன்னூத்தம்மன் கோவில் அடிவாரப் பகுதிகளில் குட்டியுடன் காட்டு யானை ஒன்று உலா வந்து கொண்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று அதே பகுதி பன்னிமடை, பூவரச மரத் தோட்டம் பகுதியில் உள்ள சுரேஷ் என்பவர் தோட்டத்து வீட்டில் நேற்று இரவு புகுந்த ஒற்றை காட்டு யானையை கண்ட அங்கு இருந்த நாய்கள் குரைத்தன. அதனை கண்டு ஆத்திரம் அடைந்த வேட்டையன் பின்புறமுள்ள ஒற்றைக் காலை தூக்கி மிதிப்பது போன்று, திடீரென திரும்பி துரத்தியது. பின்னர் அங்கு இருந்த மாட்டுக்கு தொழுவத்திற்கு நுழைந்து கால்நடைகளுக்கு வைத்து இருந்த தீவனங்களை தின்று சென்றது. அது அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த ஒற்றைக் காட்டு யானை வேட்டையன் அப்பகுதியில் உள்ள வாழை தோட்டங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தாமல், கால்நடைகளுக்கு வைத்து இருக்கும் தீவனங்களை மட்டும் தின்று சேதப்படுத்துவது வேட்டையின் பழக்கமாகும், தற்பொழுது கடந்த சில நாட்களாக தடாகம், பன்னிமடை சுற்று வட்டாரப் பகுதிகளில் முகாமிட்டு உள்ளதாகவும், இந்த யானையை வனத் துறையினர் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)