• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பல்லடம் அருகே சாலையை கடக்க முயன்ற கார் மீது வேன் மோதி விபத்து…..மூன்று பேர் படுகாயம்- போலீசார் விசாரணை…….

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அன்னூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திருவண்ணாமலையை சேர்ந்த எட்டு பேர் இரண்டு கார்களில் வால்பாறைக்கு சுற்றுலா சென்று விட்டு பல்லடம் வழியாக வீடு திரும்பி உள்ளனர். அப்போது பல்லடம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் வலது புறம் திரும்ப அன்னூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற வேன் காரின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். மேலும் அவ்வழியே சென்றவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வேனில் வந்த பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.