இஸ்லாமியர்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான ரமலான் இஸ்லாமியர்களால் ஒரு மாதம் நோன்பு இருந்து கடைபிடிக்கப்படுகிறது ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் ஆறு வேளை தொழுகை செய்து நோன்பு கடைபிடிக்கின்றனர்.
நோன்பு காலத்தில் இஸ்லாமிய மக்கள் தங்களால் இயன்ற தானம் செய்வது வழக்கம். நிலையில் காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட மீராபள்ளி தோட்டம், புது நகர், வள்ளல் சீதா காதி தெரு, சுண்ணாம்பு கார வீதி, சேமியா குளம், லைன் கரை வீதி பகுதிகளில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இங்கு வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் ஏ.வி.எஸ்.சக்திவேல்பிரபு அரிசி மூட்டையை வழங்கினார். அவரை இன்முகத்துடன் வரவேற்ற அப்பகுதி மக்கள் அரிசியை பெற்றுக் கொண்டுஅவரை வாழ்த்தினர்.