• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

புதிய முறையில் வாழ்க்கை துணையை தேடும் வாலிபர்

பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் பதாகை வைத்து வித்தியாசமான முறையில் திருமணத்திற்கு பெண் தேடும் நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகின்றது.


லண்டனில் வசித்து வருபவர் Muhammad Malik. 29 வயதான இவர் Birmingham நகரில் சுமார் 20 அடி உயரத்துக்கு பெரிய பதாகை ஒன்றை வைத்துள்ளார். அந்த பதாகையில், “என்னை Arranged marriage-ல் இருந்து காப்பாறவும்” என பெரிய எழுத்துகளில் விளம்பரம் செய்து பலரையும் கவர்ந்துள்ளார்.
மேலும் இதனுடன் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்ள ஒரு பெண் வேண்டும் எனவும் தனக்கு எந்த மாதிரி பெண் தேவை என்பது குறித்தும் பல கண்டிஷன்களை முன் வைத்துள்ளார்.
இதற்காகவே ஒரு தனி வெப்சைட் தொடங்கி அதில் அவரது கண்டிஷன்களை தெரிவித்துள்ளார். இவர் தொடங்கிய வெப்சைட் முகவரியை பதாகையில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அந்த இளைஞர் கூறியதாவது, எனக்கு வயது 29. நான் லண்டனில் வசித்து வருகிறேன்.


நான் ஒரு பஞ்சாப் குடும்பத்தை சேர்ந்தவன். தன்னுடைய வயதில் இருக்கும் ஒரு முஸ்லிம் பெண்ணை என்னுடைய வாழ்க்கை துணையாகத் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். நான் எனது அம்மா, அப்பாவுக்கு ஒரே பிள்ளை என்பதால் அவர்களை நான் தான் பார்த்துக்கொள்கிறேன்.


இது பிடிக்காது என்றால் நமக்குள் ஒத்துவராது என குறிப்பிட்டு ஒரு பெரிய லிஸ்டே தயாரித்து வெளியிட்டுள்ளார். பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணத்தில் பல பயன்கள் இருந்தாலும் எனது துணையை நானே தேட வேண்டும் என விரும்புவதாக Muhammad Malik தெரிவித்துள்ளார்.