• Tue. May 14th, 2024

பொறி வைத்து பிடித்த மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் ராஜசேகரன் தலைமையிலான குழு

BySeenu

Jan 24, 2024

கோவை நீலிகோணம் பாளையம் பகுதியில் போலி மருத்துவர் ஒருவர் மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குனர் ராஜசேகரன் அவர்களுக்கு ரகசிய தகவல் தரப்பட்டது. தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்குச் சென்ற இணை இயக்குனர் ராஜசேகரன் தலைமையிலான குழு, அவர்களின் ஓட்டுநர் மற்றும் ஒரு போலீசாரை பொதுமக்கள் போர்வையில் உளவாளியாக அனுப்பியது. உடல்நிலை சரியில்லாதது போன்று தங்களை காட்டிக்கொள்ள, தேவராஜ் பல்ஸ் டெம்பரேச்சர் பார்த்து ஊசி போட முயன்றிருக்கின்றார். அப்பொழுது அந்த நபர் அதிரடியாக ராஜசேகரன் தலைமையிலான குழுவால் சிறைபடுத்தப்பட்டார். அவரிடம் விசாரித்த பொழுது, 12-ம் வகுப்பு வரை படித்தவர் என்பது தெரிய வந்தன. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர் மருந்து கடை வைத்திருப்பவர் என்றும், பின்னாளில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்தவர் என்பதும் தெரிய வந்தன. பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த தேவராஜி, அலோபதி மருத்துவ முறையில் அடிப்படை வைத்தியம் பார்த்து, அந்த பகுதியில் டாக்டராகவே வலம் வந்திருப்பதும் தெரிய வந்தன. ஜோதி என பெயரிடப்பட்ட அந்த போலி மருத்துவர் நடத்திய கிளினிக்கில் ஆய்வு செய்த பொழுது, பயன்படுத்தப்பட்ட மருத்துவ குப்பிகளையும் அதிகாரிகள் பார்த்தனர். உடனடியாக சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டன. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார், போலி மருத்துவர் தேவராஜை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட போலி மருத்துவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பேசிய இணை இயக்குனர் ராஜசேகரன், இது போன்று போலீஸ் மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *