• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் மின் டிரான்ஸ்பர்மில் திடீர் தீவிபத்து

ByP.Thangapandi

May 25, 2024

உசிலம்பட்டியில் மின் டிரான்ஸ்பர்மில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது., தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோடு நந்தவனத்தெருவின் முன்பகுதியில் மின்வாரியத்தின் சார்பில் மின் மாற்றி எனும் டிரான்ஸ்பர்ம் அமைக்கப்பட்டு அருகில் உள்ள பல்வேறு கடைகளுக்கு மின் கம்பங்கள் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.,

இந்நிலையில் இந்த டிரான்ஸ்பர்மில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு தீ மளமளவென எரிந்து அப்பகுதி முழுவதுமாக புகை மண்டலமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.,

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது., மேலும் மின்வாரிய அலுவலர்களும் மின்சாரத்தை நிறுத்தி வைத்துவிட்டு இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.,

தினந்தோறும் பரபரப்பாக காணப்படும் பேரையூர் ரோடு பகுதியில் டிரான்ஸ்பர்மில் திடீர் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,