குமரி மாவட்டம் மேலமணக்குடி கிறிஸ்தவ தேவாலயத்தின் பங்கு பேரவை தேர்தல் அண்மையில் நடைபெற்றது.

இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உருப்பினர்கள் ஒருவர். பங்கு தந்தையை தலைவராக கொண்டு, அவருக்கு கீழ் துணைத்தலைவர் நிர்வாக குழு தேர்வு செய்யபட்டு நிர்வாகம் என்பது எல்லா கத்தோலிக்க திருச்சபையின் கீழ் உள்ள எல்லா தேவாலையங்களிலும் பின்பற்றும் முறை.
கன்னியாகுமரியை அடுத்துள்ள மேலமணக்குடி தேவாலயத்தில் அண்மையில் பங்கு பேரவை தேர்தல் நடைபெற்று. துணை தலைவர் நிர்வாக குழு தேர்வு செய்த நிலையில். பங்கு பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் வெற்றியை கொண்டாடும் வகையில் மாலை நேரத்தில் ஒரு விழா நடத்திய நிலையில். தேர்தல் காலத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமான எதிர் குழுவினர் இடையே ஏற்பட்ட மோதலில். குழுக்கள் ஒருவரை ஒருவர் கத்தி மற்றும் கட்டைகளை கொண்டு தாக்கிய நிலையில், இரண்டு குழுவிலும் பெண்களும், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல், இரண்டு குழுவிலும் பெண்களும் வீதிக்கு வந்து ஒருவர் மீது ஒருவர் கல் மண் என எடுத்து வீசினார்கள். இந்த மோதலில், ஒருவருக்கு எலும்பு முறிந்தது.

தகவல் தெரிந்த சுசீந்திரம் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு குழுவினர்களையும் சம்பவம் இடத்தில் இருந்து கலைந்துப் போக செய்தனர்.
காவல்துறையினர் வருவதற்கு முன் இருகுழுக்கள் மோதிக் கொண்டது ஒரு போர்க்களம் போன்றிருந்தது.