• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தனிநபர் தடுப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு..,

BySubeshchandrabose

Mar 14, 2026

தேனி அருகே பொம்மையகவுண்டன்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ வண்ணாத்தி மாலை அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த திருக்கோயிலில் வண்ணார் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு கோயிலில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரமேஷ் என்கிற தனிநபர் கோயில் நிலம் தனக்கு சொந்தமானது எனக் கூறி பொதுமக்களை வழிபடாமல் தடுத்து வருவதாகவும் போலி ஆவணம் மூலம் நீதிமன்றம் சென்று தங்களை வழிபட விடாமல் தடுத்து வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்

இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் திருவிழா கொண்டாட முடியாமல் அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே கோயிலுக்குள் பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.