2மாதங்களாக குடிநீர் குழாய் பைப்களை தோண்டிபோட்டுவிட்டு காலதாமதம் செய்யபட்டதால் தங்களது பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 12வது வார்டு பொதுமக்கள்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி 12வது வார்டு மேலத்தெரு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக குடிநீர் குழாய்களை தோண்டி போட்டுவிட்டு அவ்வேலைகளை கிடப்பில் போட்டதால் கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தபட்டதால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இன்று அப்பகுதி மக்கள் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சிறுது நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






; ?>)
; ?>)
; ?>)
