• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மலை அடிவாரத்தில் ஒற்றை காட்டு யானை அட்டகாசம்

BySeenu

Dec 1, 2024

கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஒற்றை காட்டு யானை அட்டகாசம். பக்தர்கள் பாதுகாப்பு தேடி ஓடி ஒளிந்தனர் !!!

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெள்ளிங்கிரி மலை அமைந்து உள்ளது. அங்கு சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒற்றை காட்டு யானை அப்பகுதிக்கு வந்து உள்ளது.

நேற்று அமாவாசை தினத்தை முன்னிட்டு 60க்கும் மேற்பட்டோர் வெள்ளிங்கிரி மலை மீது ஏறி ஏழு மலைகளை தாண்டி அங்கு சுயம்பாக எழுந்தருளி உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசித்து விட்டு மீண்டும் காட்டு வழியில் கீழே இறங்கி வந்து உள்ளனர்.
அப்போது இரவு 7 மணி அளவில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி ஆண்டவர் கோயில் அருகே ஒற்றை காட்டு யானை வந்து உள்ளது. இதைப் பார்த்ததும் அங்கு இருந்த பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களை தேடி ஓடினர். மேலும் வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து யானை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஒற்றை காட்டு யானை அங்கு உள்ள கடைகளை உடைத்து அங்கு வைத்து இருந்த பொருள்களை எடுத்து சாப்பிட முயன்றது. ஒரு கோணிப்பையில் வைத்து இருந்த வாழைப் பழத்தாரை லாபகமாக எடுத்து சாப்பிடும் காட்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

பின்னர் பக்தர்களை நோக்கி யானை வந்த போது, சிறிது நேரம் போக்கு காட்டி விட்டு அந்த யானை மீண்டும் வனதுக்குள் சென்றது. இதனை அடுத்து பக்தர்கள் அங்கு இருந்து தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.