உணவு தேடி விவசாயின் தோட்டத்து வீட்டுக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை அரிசி, பருப்பு, புண்ணாக்கு சூறையாடிக் சென்றது. உயிர் பயத்தில் எடுத்த செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் !!!.
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சுற்று வட்டார கிராம பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள காட்டு யானைகள். கூட்டம், கூட்டமாகவும், குழுக்களாகவும் மற்றும் ஒற்றைக் காட்டு யானைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து கொண்டு உள்ளது. இதனை தடுக்க வனத் துறையினரும் பல்வேறு குழுக்கள் அமைத்து கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் உணவு தேடி ஆக்ரோசமாக சுற்றி வரும் யானைகளை தடுக்கும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை தாக்கியும், சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர் கதையாகி உள்ளது. விவசாயிகளும், பொதுமக்களும் பல்வேறு வகையில் யானைகள் ஊருக்குள்ளும், விளை நிலங்களுக்குள்ளும் புகுந்து சேதத்தை ஏற்படுத்தாமல் தடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனை அடுத்து தமிழக முதல்வர் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சுற்று வட்டார கிராமப் பகுதிக்குள் யானைகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வராமல் தடுக்க வேலி அமைத்து நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து இருந்தார். அந்தப் பணிகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றி தர வேண்டுமென தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு பெரியநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி மேலுமணி என்பவரை தோட்டத்தை கேட்டை பூட்ட சென்ற போது ஒற்றைக் காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அதிகாலை நாயக்கன் பாளையம் பகுதியில் வந்த மற்றொரு ஒற்றைக் காட்டு யானை தனசேகரன் என்பவர் தோட்டத்து வீட்டிற்கு இன்று அதிகாலை 3 மணி அளவில் புகுந்த உணவு தேடி அரிசி, பருப்பு மற்றும் கால்நடைகளுக்கு வைத்து இருந்த புண்ணாக்கு ஆகியவற்றை தின்று சூறையாடி சென்றது.

விவசாயி தனசேகரன், மனைவி மற்றும் மகன் உயிர் பயத்துடன் வீட்டில் ஒளிந்து கொண்டவர்கள், விவசாயி தனசேகரின் மகன் உயிர் பயத்துடன் மறைந்து இருந்து எடுத்த செல்போன் வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.