• Wed. Jun 26th, 2024

கோவையில் தென்பட்ட அரிதான வெள்ளிக்கொல் வரையான் பாம்பு (ஓநாய் பாம்பு)

BySeenu

Jun 17, 2024

கோவை, மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூந்தொட்டி கூடையில் பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது. பாம்பு பிடி வீரரான வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த சித்ரன் என்பவருக்கு தகவல் தரப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து மசக்காளிபாளையம் பகுதிக்கு சென்ற சித்திரன், அங்கு பூந்தொட்டி செடியில் இருந்த பாம்பை பார்த்தார். அப்போது அந்த பாம்பு விஷமற்ற அரிதாக தென்படும் மரமணு குறைபாடுடைய வெள்ளி கோல் வரையான் பாம்பு என்பது தெரிய வந்தது. இதனை ஓநாய் பாம்பு என்று அழைக்கப்படுகின்றன. வழக்கமாக வெள்ளிக் கோள் வரையான் பாம்புகள் உடல் மீது கட்டுக் கட்டாக தழும்பு பட்டைகள் இருக்கும். ஆனால் நாகப்பாம்பில் மரபணு குறைபாடுடன் உள்ள பாம்பு வெள்ளை நாகம். அதுபோன்று மரபணு குறைபாடுடன் உள்ள வெள்ளிக்கோல் வரையான் பாம்புகளின் உடலில், தழும்புகள் இல்லாமல் தோல் உரித்தது போல உலாவும். இது அரிதாக தென்படும். இந்த நிலையிலே, கோவையில் மரபணு குறைபாடுனனான வெள்ளிக்கோல் வரையான் பாம்பு, மசக்காளிபாளையத்தில் தென்பட்டு இருக்கிறது. இந்த பாம்பை பிடித்து வனத்துறையில் தகவல் சொல்லப்பட்டு, அதன் வாழ்விடத்தில் விடப்பட்டது . இது போன்ற பாம்புகள் தென்படும் பொழுது, பொதுமக்கள் அதனை அடிக்கவோ விரட்டவோ கூடாது எனவும், பாம்பு பிடி வீரர்களுக்கு வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு உரிய தகவல் தரும் பட்சத்தில், அது பத்திரமாக மீட்கப்படும். பொது மக்களுக்கும் பாம்புகளுக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் அதன் வாழ்விடத்தில் விழப்படும் என்றும் பாம்பு பிடி வீரர் சித்ரன் தெரிவித்து இருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *