தோட்ட பகுதியில் இருந்து வெளியே வந்த மலைப் பாம்பை பொதுமக்களிடம் இருந்து மீட்டு வனப்பகுதியில் விடுவித்த வனத்துறையினர் !!!
கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் சிறுவாணி சாலையில் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஐந்து மூக்கு சாலை வழியாக ரோட்டை கடக்க முயற்சி செய்தது. இருசக்கர வாகனத்தில் வந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தினர். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்து மீண்டும் அடர்ந்த வனப் பகுதிக்குள் விடுவித்தனர்.








