மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தோப்பூர் அருகே ராமநாதிச்சன்புதூர் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி குமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஜென்சன் ரோச் தலைமையில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவரும், விளையாட்டு மேம்பாட்டு அணி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அமைப்பாளர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் மாணிக்க செல்வகுமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சுந்தரம், மாநகர அமைப்பாளர் ராமதாஸ், தலைவர் உசேன், மருங்கூர் பேரூராட்சி கவுன்சிலர் மரிய புஷ்பம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




