அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் நாகப்பட்டினத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார்.

நாகப்பட்டினம் மாவட்ட திமுக அலுவலகத்தில் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு புதியபஸ்ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை வழியாக நாகப்பட்டினம் பாரதி மார்கெட் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பின்னர் நாகப்பட்டினம் புத்து£ர் ரவுண்டானா அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர துணை செயலாளர்கள் திலகர், சிவா, சித்ரா, நகர பொருளாளர் அபுபக்கர், கவுன்சிலர்கள் அண்ணாதுரை, முகுந்தன், முகம்மதுநத்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..மற்றும் புத்தூர் அண்ணா சிலையில் தமிழ்நாடு மின் வளர்ச்சி கழக தலைவர் .கௌதமன் வடக்கு ஒன்றிய செயலாளர் சிக்கல் N ஆனந்த்.மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பல கலந்துகொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆரணி தொடர்ந்து ஓரணியில் தமிழ்நாடு உறுதி மொழியை கேட்டனர்