மதுரை வில்லாபுரம் பகுதியில் பல்வேறு கட்சிகளில் இருந்து அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி MLA ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்றது.

அறிவில்லாத புறம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் விலாபுரம் பகுதியைச் சேர்ந்த கர்ண என்பவரது தலைமையில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர் .

விழாவில் பேசிய எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜசத்தியன் கூறுவையில் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் அப்பா வெற்றி பெற்றார். இந்த முறையும் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக்குவது நமது லட்சியம் என தந்தையை அமைச்சராவது குறித்து தொண்டர்களிடம் பேசினார்.




