• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சரமாரியாக ஓட்டிய தனியார் பேருந்து..,

BySeenu

Jun 4, 2025

கோவை, அன்னூர் இடையே இரு வழிப் பாதையாக இருக்கும் நிலையில் , காலை மற்றும் மாலை வேளைகளில் வேலை கல்லூரி என பல்வேறு தேவைகளுக்காக கோவையில் இருந்து அன்னூர் வழியாக கோவை நோக்கியும் ஆயிரக் கணக்கான வாகனங்களில் மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் கோவையில் இருந்து அன்னூர் நோக்கி சென்ற கலைமகள் தனியார் பேருந்து சாலைகளில் செல்லும் திசை, எதிர் திசை என இரு திசைகளிலும் பிற வாகனங்களையும் , பாத சாரிகளையும் கருத்தில் கொண்டு பேருந்தை இயக்காமல் தனியார் பேருந்து ஓட்டுனர் சரமாரியாக பேருந்தை இயக்கி உள்ளார்.

இதனால் சாலையில் சென்ற பிற வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பெருந்து சரமாரியாக செல்வதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதனை வீடியோவாக எடுத்து பேருந்து ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதள பக்களில் பதிவிட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.