• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழில் களம் இறங்கும் பாலிவுட் பிரபல நடிகர்

ByA.Tamilselvan

Nov 9, 2022

பாலிவுட் பிரபல நடிகர் ரன்வீர் சிங் ஷங்கர் இயக்கும் சரித்திர படத்தின் மூலமாக தமிழில் களம் இறங்குவதாக தகவல்வெளியாகி உள்ளது.
சரித்திர படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்து வரும் வரவேற்பு திரையுலகுக்கு புதிய வாயிலை திறந்து விட்டுள்ளது. சமீபத்தில் திரைக்கு வந்த பொன்னியின் செல்வன் படமும் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. இதனால் சரித்திர கதைகளை படமாக்க திரையுலகினர் ஆர்வம் காட்டுகின்றனர். இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரலாற்று நாவல்களை தேடிப்பிடித்து படிக்க தொடங்கி உள்ளனர்.
ரன்வீர் சிங் இந்நிலையில் வேள்பாரி நாவலை படமாக்கும் முயற்சியில் இயக்குனர் ஷங்கர் இறங்கி இருப்பதாகவும், இந்த படத்தை அதிக பட்ஜெட்டில் 3 பாகங்களாக எடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் சூர்யா மன்னன் வேடத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் பரவின. தற்போது இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும் நடிக்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து ரன்வீர் சிங்கிடம், ஷங்கர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழில் தயாராகும் இந்த படத்தை தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.