• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வானத்தில் வட்டம் அடித்த விமானம்

ByKalamegam Viswanathan

Oct 11, 2024

141 பயணிகளுடன் மூன்று மணி நேரம் வானத்தில் வட்டம் அடித்த விமானம்
திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ஏறத்தாழ 2 மணி நேரம் திருச்சி பகுதியில் வானிலேயே வட்டமடித்தது.

ஏறத்தாழ 3 மணி நேரம் முயற்சிக்கு பின்னர், தற்போது திருச்சி விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

என்னதான் விமானம் பத்திரமாக தரையிறக்கம் செய்யப்பட்டு விட்டாலும் வானத்திலேயே மூன்று மணி நேரத்திற்கும் மேல் விமானம் வட்டமடித்துக் கொண்டிருந்ததால் உள்ளே பயணம் செய்யும் பயணிகள் உடைய மனநிலை பதைபதைப்பு எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

வழக்கமாக நான் திருச்சி வந்துவிட்டு டெல்லி திரும்பி செல்லும் போது திருச்சி விமான நிலையத்தில் இருந்து செல்வது வழக்கம். எந்த ஒரு முறையும் எந்த பிரச்சனையும் நடைபெற்றது இல்லை.

ஆனால், கடந்த ஆண்டு ஒருமுறை இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய வேண்டி இருந்த போது, விமானத்தில் ஏறி அமர்ந்தும் கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேலாக விமான புறப்படவே இல்லை.

என்ன என்று விசாரித்த போது தான் விமானத்தில் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு என்றும் கோளாறு சரி செய்து கொண்டிருப்பதால் இன்னும் 15 நிமிடத்தில் விமானம் கிளம்பிவிடும் என்று தெரிவித்தனர்.

அதுவரை பயணிகளை சமாதானப்படுத்துவதற்காக முந்திரி, பிஸ்கட், ஜூஸ் போன்ற சிற்றுண்டி வகைகளையும் பயணிகளுக்கு கொடுத்தனர். அரை மணி நேரம் என்று சொன்ன பிறகும் கூட விமானம் புறப்படுவதாக இல்லை.

இந்த விமானத்தில் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டுமா என்று எனக்குள்ளேயே கேள்வி எழுப்பினேன். மீண்டும் விமான பணி பெண்ணிடம் விசாரித்தபோது இன்னும் ஒரு 15 நிமிடங்கள் ஆகலாம் என தெரிவித்தார்.

நான் உடனே இதெல்லாம் சரிப்பட்டு வராது என சொல்லி இந்த விமானத்தில் எனக்கு பயணம் செய்ய விருப்பமில்லை என்னுடைய லக்கேஜை எடுத்துக் கொடுங்கள் வேறு ஒரு தேதிக்கு டிக்கெட்டை மாற்றி கொடுங்கள் என்று சண்டையிட்டேன்.

அவர்கள் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தும் நான் என்னுடைய முடிவில் பிடிவாதமாக இருந்ததால், பின்னர் விமானத்தில் ஏற்றப்பட்ட என்னுடைய லக்கேஜை மீண்டும் கீழே இறக்கினர்.

லக்கேஜை அவர்களுடைய பேட்டரி வண்டியிலேயே எடுத்துக்கொண்டு மீண்டும் விமான நிலையத்தின் கவுண்டருக்கு சென்று விமான டிக்கெட்டை ஒப்படைத்து வேறு ஒரு தேதிக்கு விமான பயணத்திற்கான டிக்கெட்டை பெற்றுக் கொண்டேன்.

என்னை பார்த்து இன்னும் நான்கு பேரும் விமானத்தில் பயணம் செய்ய விருப்பம் இல்லை எனக் கூறி லக்கேஜை பெற்றுக் கொண்டு என்னுடனே வந்து விட்டனர்.

வீட்டிற்கு வந்த பிறகு ஒரு நாள் கழித்து விசாரித்த போது தான் தெரிந்தது அந்த விமானம் அரை மணி நேரத்தில் கூட புறப்படவில்லை ஏறத்தாழ 3 மணி நேரம் கழித்து தாமதமாகத்தான் அந்த விமானம் புறப்பட்டது என்று.

அதுவரை 100 கணக்கான விமானத்திற்கு உள்ளேயே பயணிகள் காத்துக் கொண்டிருந்ததாகவும் பொறுத்திருந்து பார்த்த பயணிகள் விமான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் தெரிந்து கொண்டேன்.

15 நிமிடத்தில் கிளம்பி விடும் என்று அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு நான் விமானத்திலேயே உட்கார்ந்து இருந்தால் நானும் மூன்று, நான்கு மணி நேரம் விமானத்திற்கு உள்ளேயே அடைபட வேண்டியிருந்திருக்கும்.

எனவே இது போன்று தொழில் பிரச்சனை ஏற்படுகின்ற சமயங்களில் அதில் பயணம் செய்யாமல் இருப்பதுதான் நல்லது. திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ஏறத்தாழ 2 மணி நேரம் திருச்சி பகுதியில் வானிலேயே வட்டமடித்தது.

ஏறத்தாழ 3 மணி நேரம் முயற்சிக்கு பின்னர் தற்போது திருச்சி விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.