• Mon. May 20th, 2024

மாணவ, மாணவியர்களின் கல்வி முதல் வேலை வாய்ப்பு வரை அனைத்து தகவல்களையும் பெற, இளையோரின் பொக்கிஷம் எனும் புதிய வலைத்தளம்

BySeenu

Mar 9, 2024

இளைஞர்களுக்கு கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை உருவாக்கும் வகையில் புதிய வலைதள சேவையை துவங்கியுள்ளதாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

நவீன கால தொழில்நுட்ப வளர்ச்சியில் கணிணி பயன்பாடு தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது..பள்ளி கல்வி முதல் கல்லூரி, வேலை வாய்ப்பு பெறுவது வரை தகவல்களை பெறுவதற்கு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாணவ,மாணவிகள் அறிந்து கொள்ளும் விதமாக, பிறபடுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் சார்பாக, இளையோரின் பொக்கிஷம் எனும் வலைதளம் மற்றும் இளையோர் விழிப்புணர்வு பிரச்சார குழுக்கள் வாகனங்கள் துவங்கப்பட உள்ளது. இந்நிலையில் இது குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில்,
பிறபடுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் தலைவர் முன்னால் காவல் துறை அதிகாரியும்,தமிழ்நாடு அரசு தேர்வாணைய குழு உறுப்பினரும் ஆன ரத்தினசபாபதி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பேசிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு இந்த கூட்டமைப்பு பல்வேறு பணிகளை திரன்பட செய்துள்ளது. இந்நிலையில் 4 ஆவது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி வரும் மார்ச்.10 ந்தேதி இளையோரின் பொக்கிஷம் எனும் புதிய இணைய வலைதள பக்கத்தை கூட்டமைப்பு அறிமுகப்படுத்த உள்ளது. இதில் குழந்தை முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, மற்றும அரசு பணிகளில் சேர என்ன படிக்க வேண்டும், தேர்வுகளுக்கு தயாராவது உள்ளிட்ட தகவல்களை சேர்க்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு கல்வி முதல் வாழ்வியல் முன்னேற்றம் ஏற்படுத்திட இந்த வலைதள பக்கத்தை துவங்குவதாக தெரிவித்தார். மேலும் தேர்தல் நெருங்கி வரும் 15 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இதில் தேர்தலை முன்னிட்ட கோரிக்களை குறித்து விவாதிக்க உள்ளோம். ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம் என தெரிவித்தார். கடந்த 73 ஆண்டுகளாக சமுதாயத்திற்கான இயக்கம் என பேசி எதும் நடக்கவில்லை. எனவே அரசியல் தாண்டி கோரிக்கைகள் மீதான நடவடிக்கைகளையே எதிர்பார்ப்பதாக கூறிய அவர்,அதே போல இளைஞர் குழுக்களை உருவாக்கி கிராம,ஊராட்சி பகுதிகளில் கல்வியின் அவசியம்,அரசு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *