நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் கனடாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு இவரது நண்பர் மூலம் வெளிநாட்டில் மூலப்பொருட்கள் வாங்குவதற்கு சுமார் ரூ. 60 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் சண்முகவடிவு தலைமையிலான போலீசார் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ராஜீவ், சிபு ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் பல நபர்களிடம் பண மோசடியில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







; ?>)
; ?>)
; ?>)