காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூரில் ஒய்.எஸ்.எஸ் கிரியா என்ற ஆசிரமம் துவங்கப்பட்டுள்ளது.
இந்த ஆசிரமத்தை ஆன்மீகத் தலைவர், ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரி காணொளி மூலமாக நேரலையில் திறந்து வைத்து அக மற்றும் புறக் குழப்பங்களுக்கான பதில்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆசிரமத்தை சார்ந்தவர்கள் தெரிவித்ததாவது….
ஆன்மீகத்தில் நாம் எப்படி முன்னேறுவது இறைவன் நமக்குள் இருக்கின்றான் என்ற அனுபவத்தை நாம் எப்படி பெறுவது என்பதை கற்றுக் கொடுப்பதுதான் இந்த ஆன்மீகத்தின் முக்கிய நோக்கமாகும்.
அதுமட்டுமின்றி இந்த ஆசிரமத்தில் தியானம் கற்றுக் கொடுக்கின்றோம் மேலும் தனிநபர் ஒருவருக்கு பிரச்சினை என்று ஒன்று இருந்தால் அவர்கள் அந்தப் பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று வழிநடத்திச் செல்வதும் எங்களது நோக்கம் ஆகும்.

மேலும் குழந்தைகளை எவ்வாறு நல்வழிப்படுத்துவது அவர்களை எவ்வாறு வளர்ப்பது பற்றியும் இந்த ஆசிரமத்தில் கற்றுக் கொடுக்க அதிக ஈடுபாடு செலுத்துகின்றோம்.
தியானம் மூலம் நம் மனதை அமைதிப்படுத்த அன்றாட வாழ்க்கையை நாம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் கற்றுக் கொடுக்கின்றோம். என்று தெரிவித்தனர்.
இந்த ஆசிரம துவக்க விழா மற்றும் கலந்தாய்வு கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அனேகம் பேர் வந்து கலந்து கொண்டனர்.
