கடையில் பொருட்களை வாங்க தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் புதிய ஆப் ஒன்றை அறி முகப்படுத்தியுள்ளது.
ஜிபே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட பரிவர்த்தனை செயலிகளை போல “பைசாட்டோ ” என்ற புதிய செயலியை தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் யுகத்தில் வாடிக்கையாளர்களை தக்க வைக்க வியாபாரிகள் போராடி வருவதாகவும் பல வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பேமண்ட் மட்டுமே செய்வதால் இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலி படிபபடியாக விரிவு செய்யப்பட உள்ளது.