• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கூரை வீட்டின் மீது விழுந்த வேப்பமரம்..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு கிழக்கு வடக்கு தெருவில் சேர்ந்தவர் கருணாநிதி வயது 55 இவருக்கு சொந்தமான கூரை வீட்டில் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று மாலை வீட்டில் இருந்த பொழுது காலை முதல் பெய்த தொடர் மழை காரணமாக அவர் வீட்டின் அருகில் இருந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்து வீட்டின் கூரைமேல் விழுந்தது.

சத்தம் சத்தம் கேட்டு அலறி அடித்துக் கொண்டு வீட்டின் வெளியே வந்து பார்த்துக் கொள்வது மிகப்பெரிய மரம் ஊரிலிருந்து கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உடனடியாக சென்று மீட்பு பணியை ஆரம்பித்தனர் தகவல் அறிந்த ஒரத்தநாடு தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்குவதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பதாக தெரிவித்தனர்.