• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி உடன் பயின்ற கல்லூரி மாணவர்களின் சந்திப்பு

Byஜெ.துரை

Jan 27, 2023

சென்னை துரைப்பாக்கத்தில் அமைந்துள்ள ஜெயின் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு கூடுகை இன்று நடைபெற்றது.
இந்த கல்லுரியில் பயின்ற திரைப்பட நடிகரான விஜய் சேதுபதி அவரே இந்த மாணவர்களின் சந்திப்பு கூடுகைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.சிறப்பு விருந்தினராக வந்த திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி அவருக்கு முன்னாள் கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து அவருக்கு பொன்னாடை போர்த்தியும் விருது வழங்கியும் அவருடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து அவருடன் பயின்ற மாணவர்களின் கேள்விக்கும் மலரும் நினைவுகளுக்கும் மேடையில் இருந்து சுவாரசியமாகவும் வெளிப்படையாவும் பதில் கூறினார்.


சற்று நேரத்தில் குவிந்த அவரது ரசிகர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அவருடன் செல்பி எடுக்கும் போட்டியில் அவரை திக்கு முக்காட வைத்து கல்லூரியை விட்டு வெளியே செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டார். அதன் பின்பு செய்தியாளரிடம் பேசிய விஜய் சேதுபதியியுடன் பயின்ற முன்னாள் மாணவர்கள் கூறியதாவது:
விஜய் சேதுபதி வந்ததில் எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல் நாங்கள் எங்கள் பழைய நண்பர்கள் அனைவரையும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டோம் எங்களுக்கு மிகவும் சந்தோசம் எங்கள் கல்லூரி படித்த விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக வந்திருப்பது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார்.