வேப்பூர் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் ஆடுகளை கடத்திச் சென்ற ஒருவர் கைது தப்பி ஓடிய நபரை வேப்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறுபாக்கம் பகுதியில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் இருந்த பொழுது அந்த வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் சாக்கு மூட்டையில் இரண்டு ஆடுகளை கடத்திக் கொண்டு வந்துள்ளனர் .
அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்த போது ஒருவர் தப்பி ஓட்டம் விசாரணையில் சின்னசேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் வயது 36 என தெரிய வந்தது. மேலும் அதே ஊரைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடியது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாலமுருகனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் சின்னசேலத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பரான ஜெயராமன் ஆகிய மூவரும் நேற்று மாலை மது அருந்தி உள்ளனர்.

இந்நிலையில் மது போதை அதிகமான நிலையில் வெங்கடேசனை அங்கேயே விட்டுவிட்டு வெங்கடேசனின் இரண்டு சக்கர வாகனத்தை பாலமுருகன் மற்றும் ஜெயராமன் இருவரும் எடுத்துக் கொண்டு வந்து வேப்பூர் அடுத்துள்ள கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து மகன் செல்லதுரை வயது 51 என்பவர் தனது வீட்டின் அருகே கடை அமைத்து செம்மறி ஆடுகள் 50க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.ஆட்டு கெடையில் இரண்டு வெள்ளாடுகளையும் சேர்த்து வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு அந்த இரண்டு ஆடுகளையும் திருடிக் கொண்டு சின்னசேலம் நோக்கி போகும்போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டது தெரியவந்துள்ளது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர் மேலும் தப்பி ஓடிய ஜெயராமன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)