திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குழாய் உடைந்து பெரிய நீர் ஊற்று ஏற்பட்டது.
பழனி சண்முக நதி அருகே காவிரி கூட்டு குடிநீர் செல்லும் பைப் உடைந்து தண்ணீர் பீச்சிக் கொண்டு வெளியேறி வருகிறது.

பல தன்னார்வலர்கள் இதனை சரிசெய்ய பதிவிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. கோடைகாலத்தில் இதுபோன்று குடிநீரை வீணடிப்பது மிகுந்த வேதனை தருகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதனை உடனே சரி செய்ய நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளையின் சார்பாக வேண்டுகோள் வைக்கின்றோம்.



