திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்கள் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். படிப்பாதை, யானை பாதை வழியாக மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் . அதேபோல மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையங்களில் வருகை தரும் பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் வரை காத்திருந்து மலைக் கோவிலுக்கு சென்று சுமார் 2 மணி நேரம் வரை என நான்கு மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது . மேலும் பக்தர்கள் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.