• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் தைப்பூச விழா முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்

ByKalamegam Viswanathan

Jan 25, 2024

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் தைப்பூச திருநாளன்று இரண்டு முருகன் தெய்வானை உற்சவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை வீதி உலா.

கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய தைப்பூச திருவிழாவில் சுவாமி தினமும் காலை, மாலை இரு வேலைகளிலும் வீதியை வலம் வருவார். கடந்த 21 ஆம் தேதி பத்தாம் நாள் திருவிழா திருத்தேர் வீதி உலாவும், 22 ஆம் தேதி 11ஆம் நாள் கார்த்திகை நட்சத்திரத்தன்று தெப்ப திருவிழாவும் நடைபெற்றது.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருநாளன்று பக்தர்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.

தைப்பூச திருநாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தி அழகு குத்தி தேர் இழுத்து வந்தனர். மேலும் ஒரு சிலர் பறவை காவடி எடுத்து வந்தனர். மேலும் உற்சவர் முருகன் தெய்வானைக்கு பால், பன்னீர் , தேன், பஞ்சாமிருதம் , மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்கள் கொண்ட அபிஷேகங்கள் நடைபெறும்.

இதேபோல் திருப்பரங்குன்றம் கோவிலின் உப கோவில் ஆன காசி விஸ்வநாதர் கோவில் செல்லும் வழியில் உள்ள பழனி ஆண்டவர் சந்நிதியில் பழனியாண்டவருக்கு காலை 10 மணிக்கு பால், பன்னீர், தேன், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிருதம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெறும்.

மேலும் தைப்பூசத் திருநாளன்று ஆண்டுக்கு ஒரு முறை இரண்டு முருகன், தெய்வானை உற்சவர்கள் சன்னதியில் இருந்து புறப்பட்டு பெரிய ரதவீதி , கீழ ரதவீதி, மேல ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை சென்றடையும்.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இரண்டு முருகன் தெய்வானை உற்சவர்கள் இரண்டு பல்லாக்கில் புறப்பட்டு கோவிலில் இருந்து வீதி உலா செல்வது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்னவாகனம், வெள்ளி பூத வாகனம், சேஷ வாகனம், தங்க மயில் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் 9 நாள் நிகழ்ச்சியாக தெப்பம் முட்டு தள்ளுதலும், 10ம் நாளை தொடர்ந்து தெப்ப தேரோட்டமும் நடைபெற்றது.

11ஒஆம் நாள் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப திருவிழா ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் சுப்ரமணியசுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து சுவாமி இரவு தங்க குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இன்று தைப்பூச திருநாள் விழாவினை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றியுள்ள நிலையூர், கூத்தியார்குண்டு, பெருங்குடி, காரியாபட்டி, திருமங்கலம் போன்ற ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரை ஆக கோவிலுக்கு நடந்து வருவார்கள். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.