


ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை இந்திய மண்ணில் இருந்து அகற்ற வேண்டும் என்று போராடி வீர மரணம் அடைந்த மருது சகோதரர்களின் சிலையை சிவகங்கையில் அமைக்க வேண்டுமென சிவகங்கை பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், இன்று புதன்கிழமை சிவகங்கை மாவட்டம் அரண்மனை வாசல் பகுதிகளில் தமிழக அரசே மருது சகோதரர்களின் சிலையை சிவகங்கையில் வைக்க வலியுறுத்தி மருது பாண்டியர்களின் சமுதாய அமைப்பினர்கள் ஒன்றிணைந்து மற்றும் திமுக, அதிமுக, பாஜக, தமிழர் வாழ்வுரிமைக் கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

