• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

குமரியில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து.., இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் மறியல் ஆர்ப்பாட்டம்..!

கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தமொழி, தர்மபுரம் ஊராட்சியில் ஊழல் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திவரும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் ஈத்தாமொழி, பொட்டல்விலக்கு சந்திப்பில் மாபெரும் மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், குமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் கலந்து கொண்டார். மேலும் காங்கிரஸ் கமிட்டி இராஜாக்கமங்கலம் கிழக்கு வட்டார தலைவர் அசோக்ராஜ், குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் .சி.சரவணன், விடுதலை சிறுத்தைகள் நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் .ஏ.எல்.கலித், மற்றும் இந்திய கூட்டணி கட்சி சார்ந்த தலைவர்கள்,நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.
போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் திடீர் என சாலைமறியலில் ஈடுபட முயன்றபோது போராட்டாகாரர்களை உடனே காவல்துறை தடுத்து நிறுத்தியதோடு, எதிர் வரும் (ஜனவரி – 20)ம் தேதிக்குள் தர்மபுரம் ஊராட்சியில் உள்ள ஊழல் அதிகாரிகள் மீது காவல்துறை உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக, உயர் காவல்துறை அதிகாரி, மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் இடம் வாக்குறுதி கொடுத்தனர். காவல்துறை அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததையடுத்து இந்தியா கூட்டணி கட்சியினர் கலைந்து சென்றனர்.