சிவகங்கை நகராட்சி சார்பாக பொது சுகாதார நோய் தடுப்பு மருத்துவமனை மற்றும் வாசன் ஐ கேர் மற்றும் அப்போலோ இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம். நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரை ஆனந்த் துவக்கி வைத்தார்.
சிவகங்கை நகராட்சி சார்பில் இலவச மருத்துவ முகாமில் ஆயிரம் பேர் மருத்துவ உதவி பெற்றனர். சிவகங்கை நகராட்சி சார்பில் 27வது வார்டு பகுதியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஆயிரம் பேர் கலந்துகொண்டு மருத்துவ உதவி பெற்றனர். சிவகங்கையில் நடந்த மருத்துவ முகாமை சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் தலைமையில் சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். .அப்போலோ மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி நீலக்கண்ணணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் விஜய் ஆகியோர் மருத்துவ முகாமில் கலந்துகொண்டனர். முகாமில் இரத்த அழுத்தம், உடல் எடை, சர்க்கரை அளவு ஆகியன பரிசோதிக்கபட்டு உரிய ஆலோசானைகள் வழங்கப்பட்டு மருந்துகள், சித்த மருத்துகள் வழங்கப்பட்டன.