திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் டாக்டர் சந்தனாஸ் கிளினிக் மற்றும் ஆதார் ரத்த வங்கி இணைந்து மாபெரும் இலவச ரத்ததான முகாம் நடத்தப்பட்டது இந்த முகாமினை சிறப்பு மருத்துவர் ராஜன் துவக்கி வைத்தார் முகாமில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய கவுன்சிலர் ஆர் ரவி கலந்து கொண்டார் இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர் மேலும் இரத்ததானத்தில் பங்கேற்றவர்களுக்கு சான்றுகளும் மூவர்ண கொடிகளும் கொடுத்து மகிழ்ச்சியோடு வரவேற்கப்பட்டது மேலும் இந்த ரத்ததானத்தில் எடுக்கப்பட்ட ரத்தங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
