பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்டபுரம் பகுதியில் வழிப்பறி கொள்ளை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவியின் உத்தரவின்படி, மங்களமேடு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தன. இந்நிலையில் சின்னாறு பகுதியில் திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தணிக்கு ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பெரம்பலூர் மாவட்டம் சங்குப்பேட்டை பகுதியைச் சார்ந்த பத்மநாதன் என்பவருடைய மகன் பிரகாஷ் என்ற நபர் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்த காவலரை கண்டதும் தப்பிக்கும் முயன்று சின்னார் பாலத்தில் இருந்து குறித்த போது, காயம் ஏற்பட்டவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து அவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு இடது காலில் எலும்பு முறிவும் வலது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டதாக தெரிவித்தனர். மேலும் பிரகாசை விசாரித்த போது வாழுகின்ற புறம் பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது நான் தான் என்பதும் காவல்துறையினிடமிருந்து தப்பிக்கவே பாலத்தில் இருந்து குவித்தாகவும் கூறியுள்ளார். பின்னர் வழிப்பறி குற்ற வழக்கில் பிரகாஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல் ஆய்வாளர் பாலாஜி நீதிமன்ற உத்தரன்படி பிரகாசை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.