• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேமுதிக சார்பில் முப்பெரும் விழா..,

ByT. Balasubramaniyam

Sep 16, 2025

கேப்டன் விஜயகாந்த் 73 வது பிறந்த நாள் , தேமுதிக 21 ஆம் ஆண்டு தொடக்க விழா, தேமுதிக கட்சி கொடி ஏற்றும் விழா என முப்பெரும் விழா அரியலூர் மாவட்டம், காத்தாங்குடிக்காடு கிராமத்தில் மாவட்ட தேமுதிக சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டது.

முன்னதாக ,காத்தான்குடிக்காடு ஊராட்சியில் அமைந்துள்ள ,தேமுதிக கொடிகம்பத்தின் முன்பு நன்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு, மாவட்ட தேமுதிக செயலாளர் இராம ஜெயவேல் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து, பின்னர் அங்கு தேமுதிக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.அதனைத் தொடர்ந்து
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தேமுதிக செயலாளர் இராம ஜெயவேல் கலந்து கொண்டு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் மழைக்காலங்களில் உபயோகப்படுத்தும் வகையில் குடைகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் சசிகுமார், தா.பழூர் மேற்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் முருகானந்தம், திருமானூர் மேற்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் ஜெகதீசன், மாவட்ட தேமுதிக துணை செயலாளர் சக்தி பாண்டியன், தெற்கு ஒன்றிய தேமுதிக மகளிர் அணி செயலாளர் செல்வராணி, மாவட்ட பிரதிநிதி சின்னதுரை, மண்ணுளி சுதாகர், பு. ஓட்ட கோவில் பிலவேந்திரன், ஒரத்தூர் ஜெயராமன், பெரியபட்டா காடு சங்கர் ,ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் காத்தான்குடிகாடு ஆறுமுகம் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.