• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

போலீஸ் வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு

ByKalamegam Viswanathan

Feb 9, 2024

திருப்பரங்குன்றம் செங்குன்றம் நகர் பகுதியில் காவலர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர்.

திருப்பரங்குன்றம் செங்குன்றம் நகர் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் காவலர் ரூசோ இவரது வீட்டில் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது மேலும் சீரிய நிலையில் படம் எடுத்து நின்ற பாம்பால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

காவலர் ரூசோ வீட்டின் வலது பக்கம் உள்ள காலியான இடத்தில் செடிகள் வளர்த்து வருகிறார் இதனை அடுத்து அருகில் உள்ள முருங்கமரத்தின் மூலம் பாம்பு வீட்டிற்குள் வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டிற்குள் வந்த நல்ல பாம்பபை பார்த்த உரிமையாளர்கள் அச்சமடைந்து திருப்பரங்குன்றம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் உடனே சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த திருநகரைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் ஸ்நேக் பாபு காவலர் வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தார். சீரிய நிலையில் வீட்டிற்குள் படம் எடுத்து நின்றிருந்த நல்ல பாம்பால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.