மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளபட்டி பகுதியில் சிறுமலை அடிவார பகுதியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் நள்ளிரவில் அவ்வப்போது காட்டுத்தீ பரவுவது வழக்கம்.

இதேபோல் இந்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் உள்ள மலையில் நேற்று திடீரென நள்ளிரவில் காட்டுத்தீ மளமளவென பரவியது. இது குறித்து வனத்துறையினர் மற்றும் அலங்காநல்லூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரக அலுவலர்கள் மற்றும் அலங்காநல்லூர் தீயணைப்பு படையினர் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இரவு 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கற்றுக் கொள் கொண்டு வந்தனர். வனப்பகுதியில் உள்ள மலைகளில் காட்டுத்தீ மளமளவென பரவியதால் அந்தப் பகுதியில் இரவு முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.




