• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

யாரும் செருப்பு அணியாத உண்மை கதை கொண்ட படம்..! வட்டார வழக்கு படக்குழுவினர் பேட்டி…!

BySeenu

Jan 2, 2024

எந்த எதிர் பார்ப்புகளும் இல்லாமல் தனது படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார் என வட்டார வழக்கு திரைப்பட இயக்குனர் கோவையில் தெரிவித்துள்ளார்.

மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில்,நடிகர் சந்தோஷ் நம்பிராஜன்,நடிகை ரவீனா ரவி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள வெளியான வட்டார வழக்கு படம் கடந்த 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் கோவை ப்ராட்வேஸ் சினிமாஸில் ரசிகர்களை சந்தித்த வட்டார வழக்கு திரைப்பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய படத்தின் இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன்,இது 1985-ல் நடப்பது போன்ற கதை களத்தை கொண்ட இதில், யாரும் செருப்பு அணிந்திடாத ஒரு வட்டாரத்தில் நடக்கும் வழக்கை இந்தப் படம் பேசுவதால் ‘வட்டார வழக்கு’ என்று தலைப்பு வைத்துள்ளதாக தெரிவித்தார். மதுரை மேற்கு பகுதியில் உள்ள கிராமத்துப் பின்னணியில் படம் உருவாகி உள்ள படமாக கிராமத்து பின்னனியில் இருப்பதால்,இசைஞானியை அணுகியதாக குறிப்பிட்ட அவர்,இந்த படத்தில் அவரது இசைதான் ஹீரோ என்றார்.

அவரது இசை, இந்தப் படத்துக்குப் பெரியபலம் என்று கூறிய அவர்,என்னிடம் போதுமான பொருளாதாரம் இல்லாத போதும். அவர் எந்த வித எதிர்பார்ப்புமின்றி அவரே விரும்பி இந்த படத்திற்கு இசையமைத்தார் என நெகழ்ச்சி பட தெரிவித்தார்..

தொடர்ந்து பேசிய நடிகை ரவீனா ரவி பின்னனி குரல்கள் நிறைய பலபேசி இருந்தாலும் இந்த படத்தில் கிராமத்து பேச்சு வழக்கை தாம் கொஞ்சம் சிரமபட்டே பேசியதாக தெரிவித்தார்.சில நேரங்களில் ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் நடிகைகளுக்கு போதுமான வசதிகள் கிடைக்காமல் இருப்பது வருத்தம்தான் என்றாலும்,இது போன்ற கிராமத்து பின்னனி படங்களுக்கு அதுவே பெரிய அனுபவமாக இருப்பதாக தெரிவித்தார்.