• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளித்து தற்கொலை முயற்சி

சொந்த விவசாய நிலத்திற்கு செல்ல தடம் அமைக்க விடாமல் மிரட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயி டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு….
சேலம் மாவட்டம் டேனிஸ்பேட்டை அடுத்த பெரியவடகம்பட்டி பகுதியை சேர்ந்த மாதேஷ் அவரது தாய் புனிதா ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர் அப்போது அவர் வைத்திருந்த டீசல் எடுத்து தலையில் ஊற்றி தீப்பெட்டியை பற்ற வைக்க முயன்றார் இதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் ஓடி வந்து அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தின.

ர் இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது பெரிய வடுகம்பட்டி பகுதியில் ஒன்றை ஏக்கர் விவசாய நிலம் மற்றும் வீடு உள்ளது நிலத்தை ஒட்டி அரசு புறம்போக்கு நிலம் உள்ளது அந்த வழியாகத்தான் விவசாயம் செய்வதற்கும் வீட்டுக்கும் செல்ல வேண்டும் ஆனால் ஒரு சில நபர்கள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர்
ஆக்கிரமித்த நபருக்கு தாசில்தார் பட்டாவும் கொடுத்துள்ளார் நான் வீட்டுக்கு செல்வதற்கோ விவசாயம் செய்வதற்கோ அந்த வழியாக செல்லும் போது என்னை செல்ல அனுமதிக்காமல் கொலை மிரட்டல் விடுகின்றனர் இது குறித்து இதுவரை 30 மனுக்களுக்கு மேல் காவல் நிலையத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடமும் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை புறம்போக்கு நிலத்தில் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் பட்டா போட்டு உள்ளனர் அவர்களும் மிரட்டுவதால் என்ன செய்வது என்று தெரியவில்லை கடந்த இரண்டு மாதங்களாக எந்த பணிக்கும் செல்லாமல் அதிகாரிகளை சந்தித்தும் பயனில்லை எனவே இறப்பதே மேல் என நினைத்து தற்போது தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்
இனியாவது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆக்கிரமிப்பு செய்த நபர் மீதும் பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுத்து வழித்தடத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்தார்