


பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறையில் புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ரூ.31, 400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், முகஸ்டாலின் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று மாலை 5.45 மணிக்கு பிரதமர் மோடி சென்னை வரும் நிலையில் சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். பிரதமரை வரவேற்பதற்காக அவரது பயண பாதையில் கரகாட்டம், ஒயிலாட்டம் நிகழ்ச்சிக்கு மாநில பாஜக ஏற்பாடு செய்துள்ளது.


