• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு

ByG.Suresh

Mar 25, 2024

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தேவநாதன்யாதவை பாஜக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் சிவகங்கை தொகுதி வேட்பாளராக அறிவித்த நிலையில் நேற்று சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் , மானாமதுரை சிவகங்கை, காரைக்குடி திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் தனது முதல் நாள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்பொழுது திருப்புவனம் சந்தை திடல் பகுதியில் பட்டாசு வெடித்து போக்குவரத்துக்கு இடையூறாக கூட்டம் கூட்டியதாக மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தேவநாதன் யாதவ் சிவகங்கை பாஜக மாவட்ட தலைவர் சத்தியநாதன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் தேர்போகி பாண்டி மற்றும் ஏழு பேர் மீது திருப்புவன காவல் நிலைய காவல் சார்பாய்வாளர் சிவப்பிரகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து திருப்புவன போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.