• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆர்ப்பாட்டம் நடத்திய போது, பாலத்தின் மீது, பாலஸ்தீனக் கொடியை பறக்க விட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு…

BySeenu

Oct 27, 2023

கடந்த 24 ம் தேதி அனைத்து ஜமாத், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உக்கடம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் பொழுது உக்கடம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வரும் பாலத்தின் மீது ஏறி பாலஸ்தீன கொடியை சிலர் பறக்க விட்டுள்ளனர். இதனால் ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பை சேர்ந்த சபீர் அலி, மனித நேய ஜனநாயக கட்சியை சேர்ந்த அபுதாஹிர், ரபீக் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 143, 341, 290 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.