மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆஸ்டின்பட்டி செல்லும் திருமங்கலம் டிப்போவுக்கு சொந்தமான அரசு பேருந்து வாகன எண்TN58N2210 என்கின்ற அரசு பேருந்து அதிக அளவு புகையை கக்கி சென்று மாசினை ஏற்படுத்தும் வகையில் பேருந்து ஆனது இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் காற்று மாசு ஏற்படுவதுடன் பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு வாகனம் தெரியாத அளவிற்கு புகையானது பேருந்தில் இருந்து வெளியாகிறது. இதனால் பின்னால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையான இன்னலுக்கு ஆளாகிறார்கள். இது போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா மேலும் இது போன்ற வாகனங்களை இயக்குவதற்கு யார் அனுமதி கொடுத்தது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். நடவடிக்கை எடுக்குமா? போக்குவரத்து நிர்வாகம்.