தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் இருந்து மூவர் ரோடு நோக்கி நேற்று மாலை மீன் வியாபாரி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனம் கரம்பை பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென இருசக்கர வாகனம் தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மீன் வியாபாரி வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு தீயை அணைக்க முயற்சி செய்தார். மேலும் சாலையில் சென்றவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் பலனளிக்கவில்லை தீ கொழுந்து விட்டு எறிந்தது. பிறகு அருகில் இருந்த தீ தடுப்பான் உதவியோடு இருசக்கர வாகனத்தின் தீயை அணைத்தனர். இதில் இருசக்கர வாகனத்தில் ஒரு பகுதி எரிந்தது. சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.